2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 153,052 தற்கொலைகள் பதிவாகியுள்ளன - சராசரியாக தினசரி 418 தற்கொலைகள் - மத்திய அரசின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நோக்கம் உண்டு. அது எரும்பு ஆனாலும் சரி பெரிய யானை ஆனாலும் சரி அதற்கு ஒரு நோக்கம் உண்டு. அப்படியானால் மனிதனின் வாழ்வின் நோக்கம் எவ்வளவு பெரியது.நம் வாழ்வின் நோக்கம் நல்ல வேலை கிடைப்பது, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வது,
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது, குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துவது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இவைகள் நம் வாழ்வின் இலக்குகள் ஆகும். இவை குறுகிய கால அல்லது நீண்ட கால இலக்குகளாக இருக்கலாம், ஆனால் இந்த இலக்குகள் அனைத்தும் மையமான ஒரு நோக்கத்தை சுற்றி அமையக் கூடியதாகும்.
நோக்கம் என்பது நாம் நம் வாழ்க்கையில் வைத்திருப்பது அல்ல, அது நாம் பிறப்பதற்கு முன்பே கடவுளால் நியமிக்கப்பட்டதாகும் . இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே சில இயற்கை விதிகள் மூலம் இயங்குகின்றன, அவற்றை மீறினால், அதன் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும், உதாரணமாக கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து
குதித்தால் புவியீர்ப்பு விசை நம்மை காயப்படுத்தும். அதே போல் நீதிக்கான சில சட்டங்கள் உள்ளன, அவற்றை நாம் மீறினால் அது சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்
எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நோக்கம் ஒன்றுதான் ஆனால் குறிப்பிட்ட நோக்கம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். அனைத்து மனிதர்களின் பொதுவான நோக்கம் என்னவென்றால்
அவர்கள் வாழ்வில் அன்பு, உண்மை, பொறுமை, இரக்கம், தூய்மை போன்ற செயல்களின் மூலம் கடவுளை மகிமைப்படுத்துவதாகும்.ஆனால் நாம் முன்பு பார்த்தது போல் மேற்கண்ட நீதிக்கான விதிகளை மீறினால் அதன் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.சில பின்விளைவுகள் என்னவென்றால் மனச்சோர்வு, மன அழுத்தம், பயம் போன்றவையாகும், இவை தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.எனவே நமது கரைபட்ட மனமும் ஆவியும் புதியதாக மாற்றப்படுவதே இதற்கு தீர்வு. இது நம் முயற்சியால் சாத்தியமல்ல, ஏனென்றால் நாம் ஒரு படைப்பு மட்டுமே. ஒரு படைப்பால் தன்னை மாற்ற முடியாது, அதை படைத்தவரால் தான் மாற்ற முடியும். நம்மைப் படைத்த கடவுளை பற்றிய உண்மையை அறிவதன் மூலமே நாம் நம் மனதை மாற்ற முடியும்.
கடவுள் உங்களை நேசிக்கிறார் அவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உங்களைப் படைத்திருக்கிறார், இது உங்கள் வாழ்க்கைக்கான உங்கள் திட்டத்தை விட சிறந்தது,
நீங்கள் தற்கொலை செய்து கொண்டால், உங்கள் வாழ்க்கையில் கடவுள் வைத்திருக்கும் பெரிய நோக்கத்தை நீங்கள் இழந்துவிடுவீர்கள்
நீங்கள் தற்கொலை செய்தால் உங்கள் ஆத்துமா முடிவில்லாத நரகத்துக்கு செல்லும் அங்குள்ள வேதனை இந்த உலகத்தில் நீங்கள் பட்ட பாடுகளையும், வேதனைகளையும் விட பல மடங்கு கொடிய வேதனையாகும்
தற்கொலை செய்பவர்கள்கள் ஒருமுறை சாகிறார்கள், ஆனால் அன்புக்குரியவரின் இழப்பால் குடும்பத்தினர் ஆயிரம் முறை சாகிறார்கள்.
இதுபோன்ற தற்கொலை எண்ணங்கள் உங்களுக்கு வந்தால் உடனடியாக அதை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் (பெற்றோர், சகோதரர் அல்லது சகோதரி) அல்லது உங்கள் மீது அக்கறை கொண்ட ஒருவரிடம் சொல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களிடமில்லாத சிறந்த 10 விஷயங்களை ஒரு புஸ்தகத்தில் எழுதி அவற்றிற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
அவர் உங்களை எந்த நோக்கத்திற்காகப் படைத்தார் என்பதை அறிய உதவுமாறு கடவுளிடம் கேளுங்கள்
உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் ஏதும் இல்லை என்றால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்ப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது இந்த துண்டுப் பிரதியை வழங்குவதன் மூலமாகவோ அல்லது வழிகாட்டுதலுக்காக எங்களைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ நாம் அநேகரை தற்கொலையில் இருந்து காக்க முடியும்.